Wednesday 5 September 2012

SAMAYAL: சிக்கன் சாப்ஸ்



தேவைப்படும் பொருட்கள் :
1. காளான் - 4
2. பீன்ஸ் - 150 கிராம்
3. குடை மிளகாய் - 1
4. வெங்காயம் - 1
5. கோழிக் கறி - 350 கிராம்
6. இறைச்சி வேக வைத்த நீர் - 1/4 லிட்டர்
7. ஸோயா சாஸ் - 1 தேக்கரண்டி
8. சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
9. உப்பு - ருசிக்கு ஏற்ப
10. மிளகு - 1 தேக்கரண்டி
11. ஷெர்ரி - 1 மேஜைக்கரண்டி
12. சோள மாவு - 1 தேக்கரண்டி
தயாரிப்பு முறை :
1. காளானை ஒரு பாத்திரத்தில் போடவும்
2. அதில் வெதுவெதுப்பான் நீரை ஊற்றவும்
3. இருபது நிமிடம் வரை ஊறவிடவும்.
4. ஊறிய பிறகு அதை எடுத்துத் தண்டுப்பகுதிகளை நீக்கி விடவும்
5. காளானை மாத்திரம் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
6. பீன்ஸைக் கழுவவும்
7. துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும்
8. நார்களை அகற்றிக் கொள்ளவும்
9. குடை மிளகாய்களைக் கழுவிக் கொள்ளவும்
10. பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ளவும்
11. வெங்காயத்தைக் கழுவவும்
12. தோல் உரிக்கவும்
13. துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும்
14.கறியைக் கழுவவும், துண்டுகளாக்கவும், பாத்திரத்திலிட்டு, அடுப்பிலேற்றி, அதை நன்றாக வேகவிடவும்.
தயாரிப்பு முறை :
1. இப்போது நறுக்கப்பட்ட காய்கறிகளுடன், வேக வைக்கப்பட்டுள்ள இறைச்சித் துண்டுகளைச் சேர்க்கவும்.
2. ஒரு வாணலியில் சமையல் எண்ணெய் இரண்டு மேஜைக் கரண்டி அளவு ஊற்றவும்.
3. எண்ணெயைக் காய விடவும்
4. காய்ந்தவுடன் காய்கறி, இறைச்சி கலந்த கலவையை அதில் போட்டுக் கிட்டத்தட்ட நான்கைந்து நிமிடங்கள் வதக்கவும்.
5. வதங்கிய பிறகு அதில் இறைச்சி வேக வைக்கப்பட்ட நீரை ஊற்றவும்.
6. அத்துடன் ஸோயா ஸாஸையும் ஊற்றவும்.
7. சர்க்கரையைக் கலக்கவும்
8. உப்பு ருசிக்குத் தேவையான அளவு போடவும்
9. மிளகைத் தூள் செய்து அதில் தூவவும்.
10. நன்றாகக் கொதிக்க விடவும்.
11. இதன் பின் அனலைக் குறைத்து ஐந்து நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும்.
12. ஒரு சிறிய பாத்திரத்தில் ஷெர்ரியை எடுத்துக் கொள்ளவும்
13. அதில் சோளமாவைக் கொட்டி நன்றாகக் கலந்து கொள்ளவும்.
14. இக் கலவையையும் அடுப்பில் உள்ள கலவையுடன் சேர்க்கவும்.
15. பின்னர், மேலும் ஐந்து நிமிடங்கள் இதை அடுப்பிலேயே வைத்திருக்கவும்.
16. சிக்கன் சாப்ஸ் ரெடி.


1 comment:

  1. Usually I never comment on blogs but your article is so convincing that I never stop myself to say something about it. You’re doing a great job Man,Keep it up.Us pi network

    ReplyDelete