Saturday 16 March 2013

SAMAYAL: காய்கறி வடிவில் வரும் விஷம்

SAMAYAL: காய்கறி வடிவில் வரும் விஷம்: காய்கறி வடிவில் வரும் விஷம் ( காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்வோர் குறிப்பாக பெண்கள் படிக்க வேண்டிய பதிவு) உடல் நலத்தில் கவனம் உள்ளவர்கள்...

Monday 4 March 2013

SAMAYAL: புதினா கொத்தமல்லி கருவேப்பிலை

SAMAYAL: புதினா கொத்தமல்லி கருவேப்பிலை: புதினா கொத்தமல்லி கருவேப்பிலை மூன்றையும் தினசரி தவறாது உணவில் சேர்த்து வரவேண்டும். எளிதில் கிடைப்பதால் இவற்றின் நன்மை பலருக்கும் தெரிவதில்...

Wednesday 5 September 2012

SAMAYAL: சிக்கன் சாப்ஸ்



தேவைப்படும் பொருட்கள் :
1. காளான் - 4
2. பீன்ஸ் - 150 கிராம்
3. குடை மிளகாய் - 1
4. வெங்காயம் - 1
5. கோழிக் கறி - 350 கிராம்
6. இறைச்சி வேக வைத்த நீர் - 1/4 லிட்டர்
7. ஸோயா சாஸ் - 1 தேக்கரண்டி
8. சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
9. உப்பு - ருசிக்கு ஏற்ப
10. மிளகு - 1 தேக்கரண்டி
11. ஷெர்ரி - 1 மேஜைக்கரண்டி
12. சோள மாவு - 1 தேக்கரண்டி
தயாரிப்பு முறை :
1. காளானை ஒரு பாத்திரத்தில் போடவும்
2. அதில் வெதுவெதுப்பான் நீரை ஊற்றவும்
3. இருபது நிமிடம் வரை ஊறவிடவும்.
4. ஊறிய பிறகு அதை எடுத்துத் தண்டுப்பகுதிகளை நீக்கி விடவும்
5. காளானை மாத்திரம் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
6. பீன்ஸைக் கழுவவும்
7. துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும்
8. நார்களை அகற்றிக் கொள்ளவும்
9. குடை மிளகாய்களைக் கழுவிக் கொள்ளவும்
10. பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ளவும்
11. வெங்காயத்தைக் கழுவவும்
12. தோல் உரிக்கவும்
13. துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும்
14.கறியைக் கழுவவும், துண்டுகளாக்கவும், பாத்திரத்திலிட்டு, அடுப்பிலேற்றி, அதை நன்றாக வேகவிடவும்.
தயாரிப்பு முறை :
1. இப்போது நறுக்கப்பட்ட காய்கறிகளுடன், வேக வைக்கப்பட்டுள்ள இறைச்சித் துண்டுகளைச் சேர்க்கவும்.
2. ஒரு வாணலியில் சமையல் எண்ணெய் இரண்டு மேஜைக் கரண்டி அளவு ஊற்றவும்.
3. எண்ணெயைக் காய விடவும்
4. காய்ந்தவுடன் காய்கறி, இறைச்சி கலந்த கலவையை அதில் போட்டுக் கிட்டத்தட்ட நான்கைந்து நிமிடங்கள் வதக்கவும்.
5. வதங்கிய பிறகு அதில் இறைச்சி வேக வைக்கப்பட்ட நீரை ஊற்றவும்.
6. அத்துடன் ஸோயா ஸாஸையும் ஊற்றவும்.
7. சர்க்கரையைக் கலக்கவும்
8. உப்பு ருசிக்குத் தேவையான அளவு போடவும்
9. மிளகைத் தூள் செய்து அதில் தூவவும்.
10. நன்றாகக் கொதிக்க விடவும்.
11. இதன் பின் அனலைக் குறைத்து ஐந்து நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும்.
12. ஒரு சிறிய பாத்திரத்தில் ஷெர்ரியை எடுத்துக் கொள்ளவும்
13. அதில் சோளமாவைக் கொட்டி நன்றாகக் கலந்து கொள்ளவும்.
14. இக் கலவையையும் அடுப்பில் உள்ள கலவையுடன் சேர்க்கவும்.
15. பின்னர், மேலும் ஐந்து நிமிடங்கள் இதை அடுப்பிலேயே வைத்திருக்கவும்.
16. சிக்கன் சாப்ஸ் ரெடி.


SAMAYAL: சிக்கன் சாப்ஸ்



தேவைப்படும் பொருட்கள் :
1. காளான் - 4
2. பீன்ஸ் - 150 கிராம்
3. குடை மிளகாய் - 1
4. வெங்காயம் - 1
5. கோழிக் கறி - 350 கிராம்
6. இறைச்சி வேக வைத்த நீர் - 1/4 லிட்டர்
7. ஸோயா சாஸ் - 1 தேக்கரண்டி
8. சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
9. உப்பு - ருசிக்கு ஏற்ப
10. மிளகு - 1 தேக்கரண்டி
11. ஷெர்ரி - 1 மேஜைக்கரண்டி
12. சோள மாவு - 1 தேக்கரண்டி
தயாரிப்பு முறை :
1. காளானை ஒரு பாத்திரத்தில் போடவும்
2. அதில் வெதுவெதுப்பான் நீரை ஊற்றவும்
3. இருபது நிமிடம் வரை ஊறவிடவும்.
4. ஊறிய பிறகு அதை எடுத்துத் தண்டுப்பகுதிகளை நீக்கி விடவும்
5. காளானை மாத்திரம் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
6. பீன்ஸைக் கழுவவும்
7. துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும்
8. நார்களை அகற்றிக் கொள்ளவும்
9. குடை மிளகாய்களைக் கழுவிக் கொள்ளவும்
10. பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ளவும்
11. வெங்காயத்தைக் கழுவவும்
12. தோல் உரிக்கவும்
13. துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளவும்
14.கறியைக் கழுவவும், துண்டுகளாக்கவும், பாத்திரத்திலிட்டு, அடுப்பிலேற்றி, அதை நன்றாக வேகவிடவும்.
தயாரிப்பு முறை :
1. இப்போது நறுக்கப்பட்ட காய்கறிகளுடன், வேக வைக்கப்பட்டுள்ள இறைச்சித் துண்டுகளைச் சேர்க்கவும்.
2. ஒரு வாணலியில் சமையல் எண்ணெய் இரண்டு மேஜைக் கரண்டி அளவு ஊற்றவும்.
3. எண்ணெயைக் காய விடவும்
4. காய்ந்தவுடன் காய்கறி, இறைச்சி கலந்த கலவையை அதில் போட்டுக் கிட்டத்தட்ட நான்கைந்து நிமிடங்கள் வதக்கவும்.
5. வதங்கிய பிறகு அதில் இறைச்சி வேக வைக்கப்பட்ட நீரை ஊற்றவும்.
6. அத்துடன் ஸோயா ஸாஸையும் ஊற்றவும்.
7. சர்க்கரையைக் கலக்கவும்
8. உப்பு ருசிக்குத் தேவையான அளவு போடவும்
9. மிளகைத் தூள் செய்து அதில் தூவவும்.
10. நன்றாகக் கொதிக்க விடவும்.
11. இதன் பின் அனலைக் குறைத்து ஐந்து நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும்.
12. ஒரு சிறிய பாத்திரத்தில் ஷெர்ரியை எடுத்துக் கொள்ளவும்
13. அதில் சோளமாவைக் கொட்டி நன்றாகக் கலந்து கொள்ளவும்.
14. இக் கலவையையும் அடுப்பில் உள்ள கலவையுடன் சேர்க்கவும்.
15. பின்னர், மேலும் ஐந்து நிமிடங்கள் இதை அடுப்பிலேயே வைத்திருக்கவும்.
16. சிக்கன் சாப்ஸ் ரெடி.


SAMAYAL: ஆட்டு மூளை பொரியல்


தேவையான பொருள்கள்:
ஆட்டு மூளை - 2
மிளகாய்தூள் - 1-1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 1/2 கப்
சோம்பு - 1/2 ஸ்பூன்
எண்ணைய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.
* அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும்.
* மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.
* பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
* வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போடவும்.
* பொன்னிறமாக சிவந்தவுடன் மூளையை இந்த மசாலாவுடன் சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும்.
* நன்றாக சிவந்தவுடன் இறக்கி பறிமாறலாம்.


Friday 15 June 2012

SAMAYAL: தக்காளி பச்சடி

தேவையான பொருள்கள்
தக்காளி - 5
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 3
பாசிப் பருப்பு - 100 கிராம்
சாம்பார்ப் பொடி - 2 ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்
மல்லித் தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
பாசிப் பருப்பை வேக வைத்துக் கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயத்தைத் துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை முழுசாக, நீள வாக்கில் அரிந்து கொள்ளுங்கள். வெந்த பாசிப் பருப்புடன், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார்ப் பொடியுடன் உப்பையும் போட்டுக் கொதிக்க விடுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், மல்லித்தூள், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, பருப்பு - தக்காளிப் பச்சடியை அதில் கொட்டவும்.
கொதித்துப் பக்குவமானதும் இறக்கி வைத்துப் பயன்படுத்தவும்.

Wednesday 13 June 2012

SAMAYAL: வெள்ளரி சாதம் செய்யுங்கள்

SAMAYAL: வெள்ளரி சாதம் செய்யுங்கள்:       பச்சரிசி  – 1 கப்     *வெள்ளரி துருவல் – 1 / 2 கப்     *பச்சை மிளகாய்   -  4     *இஞ்சி  – ஒரு துண்டு     *எலுமிச்சம்பழச்சாறு  – 1 மேச...